உலகம்

"மடுரோவை விட பெரிய தண்டனை" என வெனிசுலா புதிய தலைவருக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை

தொலைபேசி பேட்டியில், டிரம்ப் ரோட்ரிக்ஸை நோக்கி, "அவர் சரியான முடிவெடுக்காவிட்டால், மடுரோவை விடப் பெரிய விலையை செலுத்த நேரிடும்" என்று எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடலில் மூழ்கி 45 வயது தாய் உயிரிழப்பு; காணாமல் போன 15 வயது மகள்; காப்பாற்ற முயன்ற 67 வயது நபரும் மரணம்

சாரணா கீலிங்கின் உடல் கடலிலிருந்து மீட்கப்பட்டு, கிரேஸ் கீலிங்கை தேடும் பணிகள் இன்னும் நடைபெற்று வருவதாக ஹம்பர்சைட் போலீஸ் குறிப்பிட்டது.

வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல் – நியூயார்க் மேயர் கடும் கண்டனம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அவர், ஜனநாயகக் கட்சி சார்பில் நியூயார்க் மேயர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் பிரசார காலத்தில் ஜனாதிபதி டிரம்பை அவர் கடுமையாக விமர்சித்து வந்தார்.

வெனிசுலா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம்

இதற்கு முன்னர், வெனிசுலாவின் எண்ணெய் துறை, பொருளாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளை டெல்சி ரோட்ரிக்ஸ் மேற்பார்வை செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

"வெனிசுலாவை நாங்கள் நிர்வாகம் செய்வோம்" – கைது செய்யப்பட்ட மதுரோவின் புகைப்படத்துடன் டிரம்ப் அதிரடி அறிவிப்பு

டிரம்ப் வெளியிட்ட அறிக்கையின்படி, அமெரிக்க ராணுவம் கராகஸ் நகரில் 7 இடங்களில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் ராணுவ தளத்திற்கு அருகில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

வெனிசுவெலாவில் அவசர நிலை; தொடர் தாக்குதலை நடத்தி ஜனாதிபதியை பிடித்த அமெரிக்க இராணுவம்

வெனிசுவெலாவின் தலைநகர் கரகஸில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 

‘நாங்கள் தயாராக இருக்கிறோம்’: போராட்டக்காரர்கள் மீது வன்முறை பயன்படுத்தினால் பதிலடி – ஈரானை எச்சரித்த டிரம்ப்

விலை உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக ஈரானின் பல பகுதிகளில் மக்கள் தொடர்ந்து வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலக முடிவு தீர்க்கதரிசனம் கூறியதாக வைரலான நபர் கைது; அவர் தொடர்பில் வெளியான தகவல்!

கைது செய்யப்பட்டவர் மதத் தலைவர் அல்ல என்றும், மூக ஊடகங்களில் தீர்க்கதரிசி போல நடித்து வந்த ஒரு சாதாரண பாதுகாப்பு ஊழியர் என்றும் கானா பொலிஸார் கூறுகின்றனர்.

சுவிட்சர்லாந்து தீ விபத்து: 40 பேர் உயிரிழப்பு, உயிரிழந்தோரை அடையாளம் காணும் பணி தீவிரம்

115 பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களில் பலருக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதியின் காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

2026 முதல் பிரித்தானியாவில் அமலாகும் புதிய குடிவரவு விதிகள்: முக்கிய விசா மாற்றங்களை தெரிந்துகொள்ளுங்கள்!

இந்த புதிய விதிகளின் கீழ், முக்கிய வேலை விசா பிரிவுகளுக்கான ஆங்கில மொழித் திறன் நிபந்தனைகள் 2026 ஜனவரி 8 முதல் கடுமையாக்கப்படுகின்றன.

குழந்தைகளை பாதுகாக்கவும் தற்கொலைகளை தடுக்கவும்  AI நிறுவனங்களுக்கு கடுமையான விதிமுறைகள்!

சிறுவர்களுக்கான உணர்ச்சி ஆதரவான சேவைகளுக்கு தனிப்பயன் அமைப்புகள், பயன்பாட்டு நேர வரம்புகள் மற்றும் பாதுகாவலர்களின் ஒப்புதலை பெறுவது அவசியமாகும்.

சீனாவின் மலிவான இறக்குமதி: பிரித்தானியாவின் பணவீக்கம் குறையும் வாய்ப்பு – உள்ளூர் தொழில்களுக்கு அச்சுறுத்தல்!

சீனாவிலிருந்து மலிவான விலையில் கார்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், ஒலி உபகரணங்கள் போன்ற பொருட்கள் பிரித்தானியாவுக்கு அதிக அளவில் இறக்குமதி ஆவதால், அங்குள்ள பணவீக்கம் குறையும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

2026 புத்தாண்டை வரவேற்கத் தயாராகும் Big Ben – நள்ளிரவு ஒலிக்குப் பின்னால் 17 மணி நேர உழைப்பு!

வானிலை எப்படி இருந்தாலும், கடும் குளிரோ மழையோ இருந்தாலும், நள்ளிரவு நேரத்தில் கடிகாரத்திற்குப் பின்னால் நின்று அனைத்தையும் கண்காணிப்பது இவர்களின் கடமை. சரியான விநாடியில் மணி ஒலிக்கும்வரை அவர்களின் கவனம் தளராது.

சட்டவிரோத குடியேற்றத்துக்கு இடமில்லை – கனடா மீண்டும் கடுமையான நடவடிக்கை

கைதானவர்கள் அனைவரும் அகதி நிலைக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்போ முடியலன்னா போர் எப்பவும் முடியாது… உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தத்தில் டிரம்ப் எச்சரிக்கை

டிரம்ப் உக்ரைன்-ரஷ்யா போர் நிறுத்தத்திற்காக 20 நிபந்தனைகளைக் கொண்ட உடன்பாட்டை முன்மொழிந்துள்ளார். நீண்ட இழுபறிக்குப் பிறகு, ஜெலன்ஸ்கி அதில் பெரும்பாலான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாபா வாங்காவின் 2026 முன்னறிவிப்புகள்: அந்நியர்கள், இயற்கை பேரழிவுகள், புற்றுநோய் குணப்படுத்தும் முன்னேற்றம் – உண்மையா அல்லது புராணக்கதையா?

பாபா வாங்கா 2026 க்கான அவரது முன்னறிவிப்புகள் தற்போது பரவலாக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் வைரலாகி வருகின்றன. அவற்றில் மிக முக்கியமானது—மனிதகுலம் முதல் முறையாக ஒரு அந்நிய நாகரிகத்துடன் தொடர்பு கொள்ளப் போகிறது என்பது.