ஐரோப்பாவில் அதிகரிக்கும் காதல் மோசடி – பெண்கள் அதிகம் பாதிப்பு என எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகளில் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து பணமோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக நேஷன்வைடு பில்டிங் சொசைட்டி தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவில் அதிகரிக்கும் காதல் மோசடி – பெண்கள் அதிகம் பாதிப்பு என எச்சரிக்கை
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஐரோப்பிய நாடுகளில் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து பணமோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக நேஷன்வைடு பில்டிங் சொசைட்டி தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்ட புதிய தகவல்களின் படி, 2024 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் இந்த வகை மோசடி வழக்குகள் சுமார் 5 சதவீதம் உயர்ந்துள்ளன.

இந்த மோசடிகளால் ஆண்களை விட பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக ஆண்கள் சராசரியாக £2,600 வரை பண இழப்பை சந்திக்கின்றனர். அதே சமயம் பெண்கள் £4,100 வரை இழப்பை சந்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் தனியாக வாழ்பவர்கள் இந்த மோசடிகளின் முக்கிய இலக்குகளாக உள்ளனர் என்று கூறப்படுகிறது. இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி நெருக்கமான உறவை உருவாக்கும் முறையில் மோசடிக்காரர்கள் செயல்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேஷன்வைடு நிறுவனத்தின் பொருளாதார குற்றப்பிரிவு தலைவர் ஜிம் வின்டர்ஸ், இந்த நிலைமை “கலப்பு காதல்–முதலீட்டு மோசடி” அதிகரித்து வருவதை காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.

எனவே இணையத்தில் அறிமுகமான நபர்களிடம் பணம் அல்லது முதலீடு தொடர்பான கோரிக்கைகளை ஏற்கும் முன் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT