விடிய விடிய PUBG விளையாட்டு: காலையில் மூளை ரத்த நாளம் வெடித்து இளைஞர் உயிரிழப்பு – அதிர்ச்சி சம்பவம்

PUBG அடிமை, ஆன்லைன் கேம் ஆபத்து, உயர் ரத்த அழுத்தம், மூளை ரத்தக்கசிவு, மீரட் சம்பவம், இளைஞர் உயிரிழப்பு, செல்போன் கேம் பாதிப்பு, உடல்நல எச்சரிக்கை

விடிய விடிய PUBG விளையாட்டு: காலையில் மூளை ரத்த நாளம் வெடித்து இளைஞர் உயிரிழப்பு – அதிர்ச்சி சம்பவம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

செல்போன் மற்றும் ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகிவிடுவது எவ்வளவு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சோகமான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. c

வேலை அல்லது தினசரி அழுத்தங்களில் இருந்து ஓய்வெடுக்க சில நிமிடங்கள் கேம் விளையாடுவது சாதாரணமானதாக இருந்தாலும், அதற்கு அடிமையாகி இரவு முழுவதும் கண் விழித்து விளையாடுவது கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையே இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் வசித்து வந்த முகமது கைஃப் என்பவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர். அவர் வீட்டில் அடிக்கடி PUBG விளையாடும் பழக்கம் கொண்டவர். ஹெட்ஃபோன் அணிந்து இரவு முழுவதும் கேமில் மூழ்கியிருப்பது அவரது தினசரி பழக்கமாக இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் கண் விழித்து கேம் விளையாட வேண்டாம் என வீட்டில் பலமுறை அறிவுறுத்தப்பட்ட போதும், அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

சம்பவம் நடந்த நாளும் வழக்கம் போல நள்ளிரவில் கேம் விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென கடுமையான தலைவலி ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். சில நொடிகளில் அவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவரை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரது நிலை மிக மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி கைஃப் உயிரிழந்தார். பின்னர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மருத்துவர்கள் அளித்த தகவலின்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது கைஃபின் ரத்த அழுத்தம் மிகவும் அபாயகரமான அளவுக்கு உயர்ந்திருந்தது. இந்த அளவுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்ததால், மூளையில் உள்ள ரத்த நாளம் வெடித்து ரத்தக்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கைஃபின் தந்தை ஃபாரூக், தனது மகன் கடந்த பத்து ஆண்டுகளாக உயர் ரத்த அழுத்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வந்ததாகவும், அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். சிகிச்சையால் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்த நிலையில், இப்படி ஒரு துயர சம்பவம் நடைபெறும் என குடும்பத்தினர் யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்த சம்பவம், குறிப்பாக இளைஞர்கள் ஆன்லைன் கேம்களில் அளவுக்கு மீறி ஈடுபடுவதால் ஏற்படக்கூடிய உடல்நல ஆபத்துகள் குறித்து சமூகத்தில் தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT