உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலினின் இல்லத்தில் இன்று (04) காலை பொலிஸார் குவிக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து அவரை வாகனத்தில் தஞ்சைக்கு அழைத்துச் சென்றனர்.

உதயநிதி ஸ்டாலினை இன்றே விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
ADVERTISEMENT
ADVERTISEMENT

தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் பற்றி அவதூறாகப் பேசியதாக எழுந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். எனினும், அவரை விசாரணைக்குப் பிறகு இன்றே விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலினின் இல்லத்தில் இன்று (04) காலை பொலிஸார் குவிக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து அவரை வாகனத்தில் தஞ்சைக்கு அழைத்துச் சென்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தஞ்சை கிழக்கு பொலிஸ் நிலையத்தில் உதயநிதி மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பகைமையைத் தூண்டுதல் (பிஎன்ஸ் 196), கலவரத்தைத் தூண்டுதல் (பிஎன்ஸ் 192), பெண்ணின் கண்ணியத்துக்குப் பங்கம் விளைவித்தல் (பிஎன்ஸ் 79) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (பிரிவு 67) உள்ளிட்ட பிரிவுகள் அடங்கும்.

காவிரி விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசை கண்டித்து தஞ்சையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், உதயநிதி பேசிய சில கருத்துகள் முதலமைச்சரை அவமதிக்கும் வகையிலும், பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையிலும் இருந்ததாக தவெக மகளிர் அணியினர் முறைப்பாடு அளித்துள்ளனர்.

உதயநிதி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனுவை நீதிபதி இளந்திரையன் விசாரித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

விசாரணையின் போது அரசுத் தரப்பு வழக்கறிஞர், உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை என்றும், விசாரணைக்குப் பிறகு பொலிஸ் நிலைய ஜாமீனில் அவர் விடுவிக்கப்படுவார் என்றும் உறுதி அளித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, உதயநிதியை இன்றே விடுவிக்க உத்தரவிட்டதோடு, அவர் பொலிஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

கைது செய்யப்பட்ட நிலையில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின், தன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகக் கூறினார்.

"நான் பேசாத ஒன்றை பேசியதாகக் கூறி, வீடியோவை வெட்டி, ஒட்டி போலிச் செய்திகளைப் பரப்புகின்றனர். நான் கலைஞரின் வளர்ப்பு, இதற்கெல்லாம் அஞ்சமாட்டேன்" என்று அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் உதயநிதியின் பேச்சுக்கு அமைச்சர் என்.ஆனந்த், தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

அதேவேளை, திமுக பொருளாளர் டி.ஆர். பாலு இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT