56 மனிதர்களின் முதுகுகளின் மீது 16 விநாடிகளில் ஓடி கின்னஸ் சாதனை படைத்த நாய்

கனடாவின் எட்மண்டன் நகரில் 56 மனிதர்களின் முதுகுகளின் மீது 16 விநாடிகளில் ஓடிக் கடந்து ஆஸ்திரேலிய ஷெப்பர்ட் நாய் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

56 மனிதர்களின் முதுகுகளின் மீது 16 விநாடிகளில் ஓடி கின்னஸ் சாதனை படைத்த நாய்
ADVERTISEMENT
ADVERTISEMENT

கனடாவின் எட்மண்டன் பகுதியில் வரிசையாகக் குனிந்து நின்ற 56 மனிதர்களின் முதுகுகளின் மீது வெறும் 16 விநாடிகளில் தாவிக்குதித்து ஓடிக் கடந்து, ஆஸ்திரேலிய ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்று புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

ஆல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த சர்வதேச நாய் பயிற்சியாளரான ஜெனிபர் பிரேசர், 'சார்டோன்' என்ற தனது பெண் நாயின் தனித்திறமையை உணர்ந்து இந்தச் சாதனைக்காகப் பயிற்சி அளித்துள்ளார். கடந்த ஜூன் 14 அன்று எட்மண்டனில் உள்ள ‘எட்மண்டன் ரிவர்ஹாக்ஸ்’ பேஸ்பால் மைதானத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் இந்த நிகழ்வு அதிகாரப்பூர்வமாக நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மைதானத்தின் புல்வெளியில் 56 தன்னார்வலர்கள் வரிசையாகப் பாலம் போல குனிந்து நிற்க, கின்னஸ் விதிகளின்படி நிர்ணயிக்கப்பட்ட ஒரு நிமிட கால அவகாசத்திற்கு மாறாக, சார்டோன் நாய் சற்றும் நிலைகுலையாமல் வெறும் 16 விநாடிகளில் அனைவரையும் கடந்து இலக்கை எட்டியது.

மனிதர்களுக்குக் காயம் ஏற்படாத வகையிலும், வேகத்தைக் குறைக்காமலும் ஓடுவதற்கு சார்டோனுக்கு நுணுக்கமான பயிற்சிகள் வழங்கப்பட்டதாக ஜெனிபர் பிரேசர் தெரிவித்துள்ளார். இந்தச் சாதனையை முறைப்படி ஆய்வு செய்த கின்னஸ் உலக சாதனை அமைப்பு அதிகாரப்பூர்வ சான்றிதழை வழங்கியுள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT