இனி எல்லா பஸ்ஸும் ஏசிதான்!.. விஜய் சொல்லிட்டாரு!.. அமைச்சர் சொன்ன தகவல்!

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், இனி வாங்கப்படும் புதிய அரசுப் பேருந்துகள் அனைத்தும் ஏசி வசதியுடன் இருக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் விரும்புவதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இனி எல்லா பஸ்ஸும் ஏசிதான்!.. விஜய் சொல்லிட்டாரு!..  அமைச்சர் சொன்ன தகவல்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

தமிழ்நாட்டில் இனி வாங்கப்படும் புதிய அரசுப் பேருந்துகள் அனைத்தும் குளிர்சாதன (ஏசி) வசதியுடன் இருக்க வேண்டும் என்பது முதலமைச்சர் விஜய்யின் விருப்பமாகும். இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக மக்கள் அனைவரும் ஏசி பேருந்துகளில் பயணிக்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் நோக்கமாகும்” என்று கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

ADVERTISEMENT
ADVERTISEMENT

“போக்குவரத்துத் துறையில் வருவாயைப் பெருக்குவதற்கான திட்டங்களை ஒவ்வொன்றாக வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறோம். விரைவில் மகளிர் இலவசப் பயணத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும்” என்றார்.

சமீபத்தில் முதலமைச்சர் விஜய் புதிய அரசு பேருந்தில் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து பெரம்பூர் வரை பயணித்தது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர், ரூ.127 கோடியில் 164 டீசல் பேருந்துகள் மற்றும் 136 சிஎன்ஜி பேருந்துகள் என மொத்தம் 300 புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

“இனி வாங்கப்படும் பேருந்துகள் அனைத்தும் ஏசி பேருந்துகளாகவே இருக்க வேண்டும். அதற்கான திட்டமிடல் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இது மக்களுக்கான ஆட்சி; மக்கள் நலனுக்கான திட்டங்கள் படிப்படியாக செயல்படுத்தப்படும்” என்று அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் உறுதிப்படுத்தினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT