இலங்கைக்கு 3 தொன் காசநோய் மருந்துகளை நன்கொடையாக வழங்கிய இந்தியா! மருந்துகள் கொழும்பை வந்தடைந்தன

இலங்கையின் பொது சுகாதாரத்துறைக்கு ஆதரவளிக்கும் வகையில் சுமார் 3 தொன் காசநோய் எதிர்ப்பு மருந்துகளை இந்தியா விசேட விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளது.

இலங்கைக்கு 3 தொன் காசநோய் மருந்துகளை நன்கொடையாக வழங்கிய இந்தியா! மருந்துகள் கொழும்பை வந்தடைந்தன
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையின் பொது சுகாதாரக் கட்டமைப்புக்கு ஆதரவளிக்கும் நோக்கில், சுமார் 3 தொன் எடையுடைய காசநோய் எதிர்ப்பு மருந்துகளை இந்தியா நன்கொடையாக அனுப்பி வைத்துள்ளது. 

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சி-130ஜே (C-130J) ரக இராணுவப் போக்குவரத்து விமானம் மூலம் இந்த மருந்துத் தொகுதி, கொழும்புக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், இலங்கையின் பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் தொடர்ச்சியாக ஆதரவளிப்பதில் இந்தியா உறுதியுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT