கொழும்பில் வாழும் வயோதிபர்களுக்கான உடல் மற்றும் உள நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் முதலாவது பகல்நேர செயற்பாட்டு மையத்தை கொழும்பு மாநகர சபை, கிருலப்பனையில் ஆரம்பித்துள்ளது.
இலங்கையின் பொது சுகாதாரத்துறைக்கு ஆதரவளிக்கும் வகையில் சுமார் 3 தொன் காசநோய் எதிர்ப்பு மருந்துகளை இந்தியா விசேட விமானம் மூலம் கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளது.
தனது தேசிய அடையாளம் கனடா என்றும் கலாசார வேர்கள் ஈழத் தமிழ் என்றும் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன் வெளியிட்ட கருத்துக்கள் புலம்பெயர் சமூகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
இலங்கையில் உயர் கல்வி கற்ற இளைஞர்களில் 43 சதவீதமானோர் வேலையின்றி தவிப்பதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளதுடன், பல்கலைக்கழக கல்விக்கும் தொழில் சந்தைக்கும் இடையிலான இடைவெளியே இதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் ஏழாவது மீளாய்வு மற்றும் பொருளாதார மதிப்பீட்டுப் பேச்சுவார்த்தைகளுக்காக இன்று இலங்கை வருகை தந்துள்ளனர்.
இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான தாய்லாந்து விசா இல்லா அனுமதி, செப்டம்பர் 15 முதல் இரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன், பயணிகள் முன்கூட்டியே இணையவழியில் விசா பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல், தெற்கு, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் போதைப்பொருள் பரிசோதனைகளின் முடிவுகளில் இந்த உண்மை வெளிவந்துள்ளது.
காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு கடும் மின்னல் எச்சரிக்கை. இரவு 11 மணி வரை எச்சரிக்கை அமலில் இருக்கும்.
பிராந்திய பதற்றம் அதிகரிக்கும் நிலையில் இலங்கை ஜனாதிபதி மற்றும் கட்டார் அமீர் இடையே முக்கிய பேச்சு நடைபெற்றது. இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பும், எரிபொருள் விநியோகமும் தொடரும் என கட்டார் உறுதி அளித்தது.
ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரச பாடசாலைகளைப் போலவே அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளும் அந்த நாளில் செயல்பட வேண்டாம் என கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
எரிபொருள் விநியோகச் சிக்கலை கருத்தில் கொண்டு, புதன்கிழமைகளில் மேலதிக வகுப்புகளையும் நடத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அந்த நாள் அரச அலுவலகங்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கலை கருத்தில் கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஹட்டன்–டிக்கோயா பகுதியில் உள்ள அரச வங்கியில் அடகு வைத்த மோதிரங்களை மீட்க சென்ற நபருக்கு வேறு மோதிரங்கள் வழங்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை தெற்குக் கடற்பரப்பில் தாக்கப்பட்டதாக கூறப்படும் IRIS Dena கப்பலில் உயிரிழந்த 84 ஈரான் கடற்படையினரின் உடல்கள் இன்று ஈரானுக்கு அனுப்பப்படுகின்றன.
மத்திய கிழக்கில் நடக்கும் போரின் நிலை நாட்டின் எதிர்காலத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டிருந்தாலும், பேருந்து கட்டணத்தில் மாற்றம் செய்யப்படமாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.