இலங்கைக்கு மூன்று ஆண்டுகள் குழந்தை பருவ புற்றுநோய் மருந்துகளை வழங்க WHO ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், இலங்கையில் குழந்தை புற்றுநோய் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் தொடர்ந்து கிடைப்பது உறுதி செய்யப்படும்.
குழந்தை பருவ புற்றுநோய் நோயாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இலங்கைக்கு வழங்கும் வகையில்உலக சுகாதார நிறுவனம் (WHO), இலங்கை சுகாதார அதிகாரிகளுடன் விரைவில் ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், இலங்கையில் குழந்தை புற்றுநோய் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் தொடர்ந்து கிடைப்பது உறுதி செய்யப்படும்.
தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளரும் நிபுணருமான டாக்டர் சேனக தலகல, இந்த ஒப்பந்தம் மிக முக்கியமானதாக இருப்பதுடன், இளம் புற்றுநோய் நோயாளிகளின் சிகிச்சையில் நிலைத்தன்மையை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.