ஆபாச தகவல்கள் மற்றும் பலாத்கார மிரட்டல்: கோர்ட்டில் ஆஜரான நடிகை ரம்யா வாக்குமூலம்

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா, சமூக வலைதளங்களில் தன்னை அவதூறாக தாக்கி பலாத்கார மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
ஆபாச தகவல்கள் மற்றும் பலாத்கார மிரட்டல்: கோர்ட்டில் ஆஜரான நடிகை ரம்யா வாக்குமூலம்

கன்னட திரையுலகின் முன்னணி நடிகையான ரம்யா என்கிற திவ்யா ஸ்பந்தனா, சமூக வலைதளங்களில் தன்னை அவதூறாக தாக்கி பலாத்கார மிரட்டல் விடுத்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

நடிகை ரம்யா காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ஆவார். தற்போது அரசியலில் இருந்து விலகி, கன்னட திரைப்பட தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் மற்றும் பின்னர் சுப்ரீம் கோர்ட்டு அதனை ரத்து செய்தது குறித்து ரம்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த பதிவில் தர்ஷனை விமர்சிக்கும் வகையில் அவர் கருத்து கூறியிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த சில ரசிகர்கள், நடிகை ரம்யாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாசமாகவும் தகாத வார்த்தைகளிலும் குறுஞ்செய்திகள் அனுப்பியதுடன், பாலியல் பலாத்கார மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து நடிகை ரம்யா பெங்களூரு போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் அளித்தார். அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் தர்ஷனின் ரசிகர்களாக கூறப்படும் 12 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கு தற்போது பெங்களூரு 46-வது செஷன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்துள்ளது. கைதான 12 பேருக்கு எதிராக போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க நடிகை ரம்யாவுக்கு கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது.

அதன்படி நேற்று நடைபெற்ற விசாரணையில் நடிகை ரம்யாவும், குற்றம்சாட்டப்பட்ட 12 பேரும் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள். வழக்கின் முதல் சாட்சியாக நடிகை ரம்யா நீதிபதி ராஜீவ் கவுடா முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார்.

பாலியல் மிரட்டல் தொடர்பான விஷயம் என்பதால் நீதிபதி மற்றும் வக்கீல்கள் மட்டுமே உள்ள அறையில் விசாரணை நடத்தப்பட்டது. அந்த அறை மூடப்பட்ட நிலையில், நடிகை ரம்யா தமக்கு வந்த ஆபாச தகவல்கள் மற்றும் மிரட்டல்கள் குறித்து விரிவாக விளக்கினார். அவரது வாக்குமூலம் வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டது.

சுமார் 20 நிமிடங்கள் வாக்குமூலம் அளித்த பின்னர் நடிகை ரம்யா கோர்ட்டிலிருந்து வெளியேறி காரில் தனது வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார்.

News21 இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

Add as a preferred source on Google
சமூக வலைத்தளங்களில் பின்தொடர