நடிகராக கோடிகளில் சம்பளம் வாங்கிய விஜய்... முதல்வராக பெறும் சம்பளம் எவ்வளவு?

சினிமாவில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய், தனது கடைசி திரைப்படத்திற்காக ரூ.275 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது. தமிழ் திரையுலக வரலாற்றிலேயே இது மிக உயர்ந்த சம்பளங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
நடிகராக கோடிகளில் சம்பளம் வாங்கிய விஜய்... முதல்வராக பெறும் சம்பளம் எவ்வளவு?
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam - TVK) அதிரடி வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ளதாக கூறப்படும் நிலையில், கட்சித் தலைவர் Vijay முதல்வராக பதவியேற்றது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியிடப்பட்டன. பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என கணித்திருந்தபோதிலும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மிகப்பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்ததாக தகவல்கள் வெளியாகின.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் குறைவாக இருந்த நிலையில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் ஆட்சியை அமைத்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் அவர் முதல்வராக பதவியேற்றதாக தகவல்கள் பரவின.

சினிமாவில் அதிக சம்பளம் வாங்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய், தனது கடைசி திரைப்படத்திற்காக ரூ.275 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது. தமிழ் திரையுலக வரலாற்றிலேயே இது மிக உயர்ந்த சம்பளங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், முதல்வராக பதவியேற்ற பிறகு விஜய் பெறும் சம்பளம் குறித்த தகவலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி, தமிழ்நாடு முதல்வருக்கான மாத சம்பளம் சுமார் ரூ.2.05 லட்சம் எனவும், இதர சலுகைகள் சேர்த்து மாதம் ரூ.2.85 லட்சம் வரை கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதன்படி ஆண்டுக்கு சுமார் ரூ.34.2 லட்சம் வருமானம் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சினிமாவில் ஒரு படத்திற்காக பெற்ற சம்பளத்துடன் ஒப்பிடும்போது, இது மிகவும் குறைவான தொகை என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

News21
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்ததா?

News21-ஐ கூகுள் நியூஸில் (Google News) பின்தொடர (Follow) செய்து, உடனுக்குடன் உண்மையான செய்திகளைப் பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -