"உடலை அல்ல, எங்கள் கலையைப் பாருங்கள்" - அநாகரீக கேமரா கோணங்களுக்கு எதிராகக் கன்னட நடிகைகள் ஆவேசம்!

ருக்மிணி வசந்த் இது ஒரு பெண்ணின் கௌரவத்திற்கு விளைவிக்கப்படும் கலங்கம் எனச் சாடியுள்ள நிலையில், சப்தமி கௌடா மற்றும் ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் ஊடகப் பிரதிநிதிகள் தொழில் தர்மத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

"உடலை அல்ல, எங்கள் கலையைப் பாருங்கள்" - அநாகரீக கேமரா கோணங்களுக்கு எதிராகக் கன்னட நடிகைகள் ஆவேசம்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகைகளான ருக்மிணி வசந்த், சப்தமி கௌடா மற்றும் ஆஷிகா ரங்கநாத் ஆகியோர், பொது நிகழ்வுகளில் புகைப்படக் கலைஞர்கள் தங்களைத் தவறான கோணங்களில் படம் பிடிப்பதற்கு எதிராகத் திரண்டுள்ளனர். 

சமீபகாலமாக அதிகரித்து வரும், நடிகைகளின் உடல் பாகங்களை வேண்டுமென்றே 'ஜூம்' செய்து சமூக வலைத்தளங்களில் வைரலாக்கும் அநாகரீகச் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இவர்கள் இந்தத் துணிச்சலான முடிவை எடுத்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தவே மேடையில் நிற்பதாகவும், ஆனால் கேமராக்கள் தங்கள் உடலை மட்டுமே மையப்படுத்துவது கண்ணியமற்ற செயல் என்றும் நடிகைகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

ருக்மிணி வசந்த் இது ஒரு பெண்ணின் கௌரவத்திற்கு விளைவிக்கப்படும் கலங்கம் எனச் சாடியுள்ள நிலையில், சப்தமி கௌடா மற்றும் ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் ஊடகப் பிரதிநிதிகள் தொழில் தர்மத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

நடிகைகளின் இந்த ஒருமித்த குரலுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பலத்த ஆதரவு கிடைத்து வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT