மீண்டும் ஹீரோவாக வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? புதிய தகவல்கள் வைரல்

அரசியலில் முழு கவனம் செலுத்துவதாக அறிவித்திருந்த உதயநிதி ஸ்டாலின் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் அரசியல் திரைப்படத்தில் அவர் நடிக்கலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மீண்டும் ஹீரோவாக வருகிறாரா உதயநிதி ஸ்டாலின்? புதிய தகவல்கள் வைரல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

தமிழக அரசியலில் முக்கிய பொறுப்பில் இருக்கும் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் சினிமாவில் நடிக்கத் தயாராக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அரசியலில் முழு நேர கவனம் செலுத்துவதற்காக சினிமாவிலிருந்து விலகுவதாக முன்பு அறிவித்திருந்த அவர், தற்போது அரசியல் சார்ந்த கதைக்களங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான உதயநிதி, தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த படத்தின் வெற்றி அவரை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க வழிவகுத்தது. பின்னர் குடும்பம், காதல், அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை மையமாகக் கொண்ட பல படங்களில் நடித்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அவரின் கடைசி திரைப்படமாக வெளியான மாமன்னன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை குவித்தது. குறிப்பாக அரசியல் மற்றும் சமூக நீதி சார்ந்த கதைக்களம் கொண்ட அந்த படம், உதயநிதியின் திரைப்பயணத்தில் முக்கிய இடத்தைப் பெற்றது.

இந்த நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் மீண்டும் உதயநிதியை வைத்து புதிய திரைப்படம் இயக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து பேசியது இந்த தகவல்களுக்கு மேலும் வலுசேர்த்துள்ளது.

புதிய படம் முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் உருவாகக்கூடும் என்றும், தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை மையமாகக் கொண்ட கதையாக இருக்கலாம் என்றும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. திரைப்படங்கள் மூலமாக பொதுமக்களிடம் தங்களது கருத்துகளை கொண்டு செல்லும் முயற்சியாக இந்த முடிவு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதே நேரத்தில், Red Giant Movies நிறுவனத்தின் பொறுப்புகளை தற்போது உதயநிதியின் மகன் இன்பநிதி கவனித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், உதயநிதி மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்துவதற்கான சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், உதயநிதியின் ரசிகர்கள் இந்த தகவலை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT