போலி ஆவணங்களில் சட்டவிரோத காணிகள் பரிமாற்றம்: கொழும்பு நிலப் பதிவாளர் சி.ஐ.டியினரால் கைது!

கைது செய்யப்பட்டவர் பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயது பெண் ஆவார்.
போலி ஆவணங்களில் சட்டவிரோத காணிகள் பரிமாற்றம்: கொழும்பு நிலப் பதிவாளர் சி.ஐ.டியினரால் கைது!
AI generated image
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

போலி ஆவணங்களைத் தயாரித்து சட்டவிரோதமாக காணிகளைப் பரிமாற்றம் செய்வதற்கு உதவிய குற்றச்சாட்டில், கொழும்பு பிரதேச நிலப் பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் நிலப் பதிவாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (07) இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

கைது செய்யப்பட்டவர் பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயது பெண் ஆவார்.

வெளியார்களுக்கு உறுதிப் பத்திரங்களின் இரண்டாம் பிரதிகள் மற்றும் பதிவேடு தொடர்பான ஆவணங்களை சட்டவிரோதமாக வழங்கியமை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுக்கு உதவியமை மற்றும் சதி செய்தமை, காணி உரிமையாளர்களுக்கு எதிராக போலி ஆவணங்களைத் தயாரித்து, சட்டவிரோதமான முறையில் காணிகளைப் பரிமாற்றம் செய்யத் துணை நின்றமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அவர் முகங்கொடுத்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -
கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -