இலங்கையின் 27வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ பொறுப்பேற்பு

இலங்கையின் 27வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இன்று மத்தேகொட கடற்படைத் தலைமையகத்தில் தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார்.

இலங்கையின் 27வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ பொறுப்பேற்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையின் 27வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இன்று (ஜூலை 1) தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார்.

மத்தேகொடவில் அமைந்துள்ள கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அவர் புதிய கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பதவியேற்பை முன்னிட்டு, கடற்படைத் தலைமையகத்தில் வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுக்கு விசேட அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. கடற்படை மரபுகளுக்கு அமைவாக நடைபெற்ற இந்த நிகழ்வில் மூத்த அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

புதிய கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இலங்கை கடற்படையின் செயற்பாட்டு திறன், கடல்சார் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT