பயணிகளின் பொதிகளை பயன்படுத்தி ரூ.1 கோடிக்கும் அதிக பெறுமதியான மருந்துகள் கடத்தல்? கொழும்பில் களஞ்சியம் சிக்கியது!


பயணிகளின் பொதிகளை பயன்படுத்தி ரூ.1 கோடிக்கும் அதிக பெறுமதியான மருந்துகள் கடத்தல்? கொழும்பில் களஞ்சியம் சிக்கியது!
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பு, ஹவ்லொக் டவுன் (Havelock Town) பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மருந்து களஞ்சியசாலை ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) நேற்று முன்தினம் (05) முற்றுகையிட்டுள்ளது. 

இந்த நடவடிக்கையின் போது, 1 கோடி ரூபாய்க்கும் அதிக சந்தைப் பெறுமதியுடைய மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

முறையான இறக்குமதி உரிமம் இன்றி பெருமளவிலான மருந்துப் பொருட்கள் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்ததை நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

இதன்போது புற்றுநோய் மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் உட்பட 100க்கும் மேற்பட்ட வகையிலான மருத்துவப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட நபர்கள், சட்டபூர்வமான அனுமதியின்றி, பயணிகளின் பொதிகள் (Passenger baggage) ஊடாக இந்த மருந்துகளை நாட்டுக்குள் கொண்டு வந்து, பின்னர் அவற்றை மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இது குறித்த மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் கீழ், இதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT