மட்டக்குளியில் கார் பல வாகனங்களுடன் மோதி கோர விபத்து: உயிரிழந்தோர் எண்ணிக்கை 3ஆக உயர்வு; 12 பேர் காயம்!
மட்டக்குளி பகுதியில் நேற்றிரவு கார் ஒன்று பல வாகனங்களுடன் மோதி ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.
கிராண்ட்பாஸ், கொழும்பு 15 மற்றும் வத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 64 வயதுடைய இருவர் மற்றும் 44 வயதுடைய ஒருவர் ஆகியோரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வேகமாகப் பயணித்த கார் ஒன்று வீதியில் சென்ற மூன்று ஓட்டோக்கள் மற்றும் 04 மோட்டார் சைக்கிள்களுடன் அடுத்தடுத்து மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து நடந்த உடனேயே களத்தில் இறங்கிய பிரதேச மக்கள், படுகாயமடைந்தவர்களை மீட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தற்போது விபத்தில் காயமடைந்த 08 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கி, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதியைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விபத்து குறித்து மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Dashcam footage
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.