இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணியில் மீண்டும் தசுன் ஷானக்க, சரித் அசலங்க: புதிய சுழற்பந்துவீச்சாளர் சசிந்து கொலம்பகே சேர்ப்பு

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 குழாம்களில் தசுன் ஷானக்க மற்றும் சரித் அசலங்க ஆகியோர் மீண்டும் இடம்பிடித்துள்ளதுடன், புதுமுக வீரர் சசிந்து கொலம்பகே ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணியில் மீண்டும் தசுன் ஷானக்க, சரித் அசலங்க: புதிய சுழற்பந்துவீச்சாளர் சசிந்து கொலம்பகே சேர்ப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர்களுக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், முன்னாள் தலைவர்களான தசுன் ஷானக்க மற்றும் சரித் அசலங்க ஆகியோர் மீண்டும் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இதன் மூலம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பின்னர் தசுன் ஷானக்க தனது முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் குழாத்தில் தசுன் ஷானக்கவுடன் சர்வதேச போட்டிகளில் இதுவரை களமிறங்காத சுழற்பந்துவீச்சாளர் சசிந்து கொலம்பகே புதுமுக வீரராக இணைக்கப்பட்டுள்ளார். அதேவேளை, கடந்த ஜூன் மாதம் மேற்கிந்தியத் தீவுகளில் மழையினால் பாதிக்கப்பட்ட மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-0 எனக் கைப்பற்றிய இலங்கை அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்துவீச்சாளர்களான மிலான் ரத்நாயக்க மற்றும் பிரமோத் மதுஷான் ஆகியோர் இம்முறை அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதாக, தசுன் ஷானக்கவின் மீள்வருகையானது இலங்கை அணியின் மத்தியவரிசை துடுப்பாட்டத்திற்குத் தேவையான அனுபவ பலத்தை வழங்கவுள்ளது. இதுவரை 71 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஷானக்க, அவற்றில் 43 போட்டிகளில் இலங்கை அணியை வழிநடத்தியுள்ளார். இருப்பினும், ஒருநாள் போட்டிகளில் தனது 22.39 என்ற துடுப்பாட்ட சராசரியை மேலும் உயர்த்த வேண்டிய சவாலை அவர் எதிர்கொண்டுள்ளார்.

இங்கிலாந்து தொடருக்கான இலங்கை ஒருநாள் குழாத்திற்கு குசல் மெண்டிஸ் தலைமை தாங்குவதுடன், சரித் அசலங்க உப தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். குழாத்தில் பெத்தும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, தசுன் ஷானக்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, சசிந்து கொலம்பகே, துஷ்மந்த சமீர, எஷான் மாலிங்க, அசித்த பெர்னாண்டோ மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேவேளை, இருபதுக்கு 20 தொடருக்கான இலங்கை அணியில் சரித் அசலங்கவின் மீள்வருகை முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் சேர்க்கப்படாதிருந்த அசலங்க, அண்மையில் நிறைவடைந்த லங்கா பிரீமியர் லீக் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற காலி கெலன்ட்ஸ் அணிக்காக அபாரமாக ஆடி 4 அரைச்சதங்கள் அடங்கலாக 38.50 சராசரி மற்றும் 153.38 ஓட்டவேகத்துடன் 385 ஓட்டங்களை விளாசியதன் மூலம் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். மேலும், இந்த முழு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போதும் குசல் மெண்டிஸ் அணித்தலைவராகத் தொடர, சரித் அசலங்க உப தலைவராகச் செயல்படவுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT