சர்வதேச மாணவர்கள் குடும்பத்தினரை அழைத்து வரத் தடை விதிக்க அவுஸ்திரேலியா திட்டம்

அவுஸ்திரேலியாவுக்குக் கல்வி கற்க வரும் சர்வதேச மாணவர்கள் தங்கள் துணை மற்றும் குழந்தைகளை அழைத்து வரத் தடை விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

சர்வதேச மாணவர்கள் குடும்பத்தினரை அழைத்து வரத் தடை விதிக்க அவுஸ்திரேலியா திட்டம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

அவுஸ்திரேலியாவுக்கு உயர்கல்வி கற்கச் செல்லும் சர்வதேச மாணவர்கள், தங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளைத் தங்களுடன் அழைத்து வருவதைத் தடை செய்ய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

அத்துடன், மாணவர்கள் தங்கள் விசா வகைகளை எளிதாக மாற்றிக் கொள்வதற்குக் கடுமையான கட்டுப்பாடுகளையும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த அதிரடி மாற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவுஸ்திரேலிய உள்விவகாரத் துறை அமைச்சர் டோனி பர்க் வெளியிட உள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேற்கத்திய நாடுகள் பலவும் புலம்பெயர்தல் விதிகளைத் தீவிரமாகக் கட்டுப்படுத்தி வரும் சூழலில், அவுஸ்திரேலியாவும் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது.

சர்வதேச மாணவர்கள் கல்வி பயில வரும்போது குடும்பத்தினரையும் அழைத்து வருவதற்குத் தடை விதிப்பது உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் மூலம் வெளிநாட்டவர்களின் வருகையைக் கட்டுப்படுத்த அரசு இலக்கு வைத்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளைப் பிரதிபலிக்கும் வகையில், அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியர்களுக்கே என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஒன் நேஷன் கட்சி செயல்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

சுவிட்சர்லாந்தின் சுவிஸ் மக்கள் கட்சி, பிரித்தானியாவின் யூகே ரீஃபார்ம், பிரான்சின் நேஷனல் ராலி, ஜேர்மனியின் AfD போன்ற புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சிகளைப் போன்றே இக்கட்சியும் தீவிர பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறது. அண்மைக்கால ஆய்வுகளில் ஒன் நேஷன் கட்சிக்கு மக்கள் ஆதரவு கணிசமாக அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வரும் போதிலும், ஒன் நேஷன் கட்சியின் செல்வாக்கு உயர்வும் அரசியல் அழுத்தங்களுமே ஆளுங்கட்சி இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT