மெகசின் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்தல்: சிறைச்சாலை அதிகாரி கைது!

இந்தச் சோதனையின் போது சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியுடைய 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 20 கிராம் ஹெரோய்ன் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மெகசின் சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்தல்: சிறைச்சாலை அதிகாரி கைது!
ADVERTISEMENT
ADVERTISEMENT

மெகசின் சிறைச்சாலையிலுள்ள கைதி ஒருவருக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற குற்றச்சாட்டில் 53 வயதான சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்தச் சோதனையின் போது சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியுடைய 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 20 கிராம் ஹெரோய்ன் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கல்கிசை பகுதியில் 32 வயதுடைய நபரொருவர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டதை அடுத்து, கல்கிசை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளைத் தொடங்கினர். 

விசாரணையின் போது, சிறைச்சாலையிலுள்ள கைதி ஒருவர் வாட்ஸ்அப் மூலம் தன்னைத் தொடர்புகொண்டு, போதைப்பொருள் பொதியை ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து பெற்றுக்கொள்ளுமாறு பணித்ததாக அந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குறித்த போதைப்பொருள் பொதியை பொரளை, வனதா வீதியில் வைத்து மற்றுமொருவரிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. பொலிஸார் அந்தப் பகுதியை கண்காணித்தபோது, சிறைச்சாலை விளையாட்டு சீருடை அணிந்த ஒருவர் அந்தப் பொதியைப் பெற்றுக்கொள்ள வந்தபோது சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

விசாரணையில் அவர் மெகசின் சிறைச்சாலையில் பணியாற்றும் சிறைச்சாலை அதிகாரி என்பது உறுதி செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சிறைச்சாலை அதிகாரி, தங்காலை, பெலியத்த பகுதியைச் சேர்ந்தவர் ஆவர். இவர் இதற்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் பணியாற்றிவிட்டு, கடந்த ஜனவரி மாதம் முதல் மெகசின் சிறைச்சாலையில் பணியில் இணைந்துள்ளார். தெகிவளையைச் சேர்ந்த 32 வயதுடைய முதல் சந்தேகநபரும் தற்போது பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT