மூன்று ஆண்டுகளுக்குப் பின் இந்தியா திரும்பும் ஐபிஎல் ஏலம்: 2027 மினி ஏலத்தை கோவாவில் நடத்த பிசிசிஐ தீர்மானம்

மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஐபிஎல் வீரர்கள் ஏலம் இந்தியா திரும்பும் நிலையில், 2027 பருவகாலத்திற்கான மினி ஏலம் டிசம்பரில் கோவாவில் நடைபெறும் என பிசிசிஐ உறுதி செய்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்குப் பின் இந்தியா திரும்பும் ஐபிஎல் ஏலம்: 2027 மினி ஏலத்தை கோவாவில் நடத்த பிசிசிஐ தீர்மானம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2027 பருவகாலத்திற்கான வீரர்கள் மினி ஏலம் இந்தியாவில் உள்ள கோவா மாநிலத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

கடந்த மூன்று பருவகாலங்களாக மத்திய கிழக்கு நாடுகளில் தொடர்ச்சியாக வெளிநாட்டு அரங்குகளில் முன்னெடுக்கப்பட்டு வந்த ஐபிஎல் ஏல நடைமுறை, மூன்று ஆண்டுகளின் பின்னர் மீண்டும் இந்திய மண்ணிற்குத் திரும்புகின்றமை கிரிக்கெட் வட்டாரங்களில் முக்கிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பிசிசிஐயின் செயலாளர் தேவஜித் சைகியா, கடந்த மூன்று ஆண்டுகளில் சவூதி அரேபியா, துபாய் மற்றும் அபுதாபி ஆகிய வெளிநாட்டு நகரங்களில் ஐபிஎல் ஏலத்தை வெற்றிகரமாக நடத்திய பின்னர், இவ்வருட டிசம்பர் மாதத்தில் கோவாவில் ஏலத்தை நடத்த தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார். 

டிசம்பர் 15 ஆம் திகதியை அண்மித்த நாட்களில் இந்த மினி ஏலம் திட்டமிடப்படவுள்ளதுடன், இதற்கான குறிப்பிட்ட திகதி மற்றும் அரங்கம் தொடர்பான மேலதிக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.

முன்னதாக 2023 ஆம் ஆண்டு கொச்சியில் ஏலம் இடம்பெற்றதன் பின்னர், 2024 இல் துபாயிலும், 2025 ஆம் ஆண்டுக்கான இரண்டு நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவின் ஜித்தா நகரிலும், 2026 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் அபுதாபியிலும் நடத்தப்பட்டன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இவ்வாறு வெளிநாடுகளில் ஏலத்தை முன்னெடுக்கும் போது உரிமையாளர் குழுக்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கு ஏற்பட்ட போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு நிர்வாகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, ஏலத்தை மீண்டும் நாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என அணிகளின் உரிமையாளர்கள் விடுத்த கோரிக்கையினை அடுத்தே பிசிசிஐ இந்த இறுதித் தீர்மானத்தை எடுத்துள்ளது.

டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் நிலவும் திருமண சீசன் காரணமாக ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறைகளைப் பெறுவதில் உள்ள நெரிசலைக் கருத்திற்கொண்டு, குறைந்தளவிலான பிரதிநிதிகளுடன் இடம்பெறும் மினி ஏலத்திற்கு கோவா மிகவும் பொருத்தமான அமைவிடமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

எதிர்வரும் 2027 பருவகாலத்திற்கு ஒவ்வொரு அணியினதும் வீரர் கொள்வனவுக்கான மொத்தத் தொகை (Purse) 130 கோடி இந்திய ரூபாயாக அதிகரிக்கப்படவுள்ள பின்னணியில், அணிகள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் இறுதிப் பட்டியல் அடுத்த சில மாதங்களில் வௌியிடப்படவுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT