11 வருடங்களாக தொடரும் மும்பை இந்தியன்ஸ் சோகம்.. குஜராத் டைட்டன்ஸ் மிரட்டல் வெற்றி!

2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து இதுவரை முதல் தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதே இல்லை என்ற மோசமான வரலாறு மீண்டும் தொடர்ந்துள்ளது.

மார்ச் 25, 2024 - 12:14
மார்ச் 26, 2024 - 12:52
11 வருடங்களாக தொடரும் மும்பை இந்தியன்ஸ் சோகம்.. குஜராத் டைட்டன்ஸ் மிரட்டல் வெற்றி!

17வது ஐபிஎல் தொடரின் 5வது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் அஹமதாபாத்தில் மோதின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. குஜராத் அணியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 45 ரன்களும், சுப்மன் கில் 31 ரன்களும் எடுத்தனர்.

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா 43 ரன்களும், நமன் தீர் 20 ரன்களும், பெர்வீஸ் 46 ரன்களும், திலக் வர்மா 25 ரன்களும் எடுத்தனர்.

எனினும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் பெரிதாக ரன் குவிக்க முடியாமல் திணறினர். கடைசி ஒரு ஓவருக்கு 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இக்கட்டான நிலையை மும்பை இந்தியன்ஸ் அணி சந்தித்தது.

கடைசி ஓவரை வீசிய உமேஷ் யாதவ் முதல் 2 பந்தில் 10 ரன்கள் விட்டுகொடுத்தாலும், அதே ஓவரில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி கொடுத்ததால் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

குஜராத் அணிக்கு எதிரான இந்த தோல்வியின் மூலம் கடந்த 2013ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து இதுவரை முதல் தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றதே இல்லை என்ற மோசமான வரலாறு மீண்டும் தொடர்ந்துள்ளது.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!