கணவனால் கொல்லப்பட்ட 22 வயது பெண்: 25 வயது கணவன் வைத்தியசாலையில் அனுமதி!
கணவன், மின் விசிறிக் கம்பியைப் பயன்படுத்தி கழுத்தை நெரித்து மனைவியைக் கொலை செய்திருக்கலாம் என்று ஆரம்ப விசாரணைகளின்படி சந்தேகிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு - வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரியங்கட்டுப் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று திங்கட்கிழமை (17) மாலை 22 வயது பெண் கொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்ட சம்பவம் குறித்து, பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தட்டமுனையைச் சேர்ந்த கொல்லப்பட்ட பெண், சம்பவத்திற்கு சற்று முன்பு தனது கணவருடன் குடும்பத் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
கணவன், மின் விசிறிக் கம்பியைப் பயன்படுத்தி கழுத்தை நெரித்து மனைவியைக் கொலை செய்திருக்கலாம் என்று ஆரம்ப விசாரணைகளின்படி சந்தேகிக்கப்படுகிறது.
சடலத்தை நீதிபதி பார்வையிட்டதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக சடலம், மட்டக்களப்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவத்திற்குப் பின்னர் 25 வயது கணவர், விஷம் குடித்து, மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.