IND vs PAK: டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு – இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்

இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், டாஸ் வென்றிருந்தாலும் முதலில் பேட்டிங் செய்திருப்போம் என தெரிவித்தார். இது சாதாரண போட்டி அல்ல என்பதை அணியினர் நன்கு புரிந்துள்ளனர் என்றும், முதல் இரண்டு போட்டிகளில் பெற்ற வெற்றி அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளதாகவும் கூறினார்.

IND vs PAK: டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு – இந்திய அணியில் 2 அதிரடி மாற்றங்கள்
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பில் நடைபெறும் 2026 டி20 உலகக்கோப்பையின் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய இந்தியா–பாகிஸ்தான் மோதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். ஆடுகளம் மெதுவாகவும் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவும் இருக்கும் என மதிப்பிட்ட பாகிஸ்தான் அணி, தொடக்க ஓவர்களில் அதனைப் பயன்படுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளது.

டாஸ் பிறகு பேசிய சல்மான் அலி ஆகா, ஆடுகளம் பிசுபிசுப்பாக இருப்பது போல தெரிகிறது என்றும், தங்கள் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் முன்னிலை பெறுவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் தான் களமிறங்குகிறோம் என்றும் அவர் கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், டாஸ் வென்றிருந்தாலும் முதலில் பேட்டிங் செய்திருப்போம் என தெரிவித்தார். இது சாதாரண போட்டி அல்ல என்பதை அணியினர் நன்கு புரிந்துள்ளனர் என்றும், முதல் இரண்டு போட்டிகளில் பெற்ற வெற்றி அணிக்கு நம்பிக்கை அளித்துள்ளதாகவும் கூறினார்.

இந்திய அணியில் இரண்டு முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உடல்நலம் தேறிய அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அணிக்குத் திரும்பியுள்ளார். மேலும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் அர்ஷ்தீப் சிங் மற்றும் சஞ்சு சாம்சன் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா அணியின் பிளேயிங் லெவனில் இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக இடம்பெற்றுள்ளார். அவருடன் அபிஷேக் சர்மா, திலக் வர்மா, கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பாகிஸ்தான் அணியில் சாஹிப்சதா ஃபர்ஹான் விக்கெட் கீப்பராக உள்ளார். அவருடன் சயிம் அயூப், கேப்டன் சல்மான் அலி ஆகா, பாபர் அசாம், ஷதாப் கான், உஸ்மான் கான், முகமது நவாஸ், பஹீம் அஷ்ரப், ஷாகின் ஷா அப்ரிடி, உஸ்மான் தாரிக் மற்றும் அப்ரார் அகமது ஆகியோர் விளையாடுகின்றனர்.

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியுள்ள இந்த மோதல், இரு அணிகளுக்கும் அழுத்தம் நிறைந்த முக்கிய போட்டியாக பார்க்கப்படுகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT