வீடு உடைக்கப்பட்டு நகையும் பணமும் திருட்டு!

மாவடிப்பள்ளி உட்பட புறநகர் பகுதியில் அண்மைக்காலமாக  திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு  பொலிஸார் கேட்டுள்ளனர். 

மார்ச் 5, 2025 - 15:50
வீடு உடைக்கப்பட்டு நகையும் பணமும் திருட்டு!

வீடொன்று சூட்சுமமாக உடைக்கப்பட்டு, நகை மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம், காரைதீவு பொலிஸ் பிரிவில் உள்ள மாவடிப்பள்ளி பகுதியில் நேற்றிரவு (04) இடம்பெற்றுள்ளது.
 
சம்பவம் தொடர்பாக காரைதீவு பொலிஸாருக்கு இன்று (05) காலை கிடைக்கப்பெற்ற  முறைப்பாட்டிற்கமைய, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் புலன் விசாரணைகளை மேற்கொண்டனர்.

ரமழான் நோன்பு காலம் என்பதால், வீட்டின் உரிமையாளர்கள் இரவு வணக்க வழிபாட்டிற்கு சென்று மீண்டும் வீடுகளுக்கு வந்து நள்ளிவு 12 மணியளவில்   உறங்க சென்ற வேளை நகைகள் வைக்கப்பட்டிருந்த அலுமாரி  மற்றும் வீட்டின் ஜன்னல்  உடைக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார்.

பின்னர் வீட்டை சோதனை செய்த போது தங்க நகைகள் மற்றும் பணம்  திருடப்பட்டுள்ளதை வீட்டு உரிமையாளர் அவதானித்துள்ளார். 

இந்த திருட்டு சம்பவம் தொடர்பில்  கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் ஆலோசனையில், காரைதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர். எஸ். ஜெகத்  வழிகாட்டுதலில்,  காரைதீவு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மாவடிப்பள்ளி உட்பட புறநகர் பகுதியில் அண்மைக்காலமாக  திருடர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறு  பொலிஸார் கேட்டுள்ளனர். 

(பாறுக் ஷிஹான்)

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!