காதலர் தினத்தில் தனுஷ்–மிருணாள் தாகூர் திருமணமா? சமூக வலைதளங்களில் வைரலாகும் கிசுகிசு
நடிகர் Dhanush மற்றும் பாலிவுட் நடிகை Mrunal Thakur காதலித்து வருகிறார்கள் என்ற பேச்சு கடந்த சில மாதங்களாகவே சினிமா வட்டாரங்களில் அடிபட்டு வருகிறது.
நடிகர் Dhanush மற்றும் பாலிவுட் நடிகை Mrunal Thakur காதலித்து வருகிறார்கள் என்ற பேச்சு கடந்த சில மாதங்களாகவே சினிமா வட்டாரங்களில் அடிபட்டு வருகிறது. தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவாக பேசாத தனுஷ், தனது பெயர் மிருணாள் தாகூருடன் இணைத்து பேசப்படுவது குறித்தும் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மிருணாளும் அமைதியாக தனது தொழிலில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால், இருவரைச் சுற்றியுள்ள காதல் கிசுகிசுக்கள் மட்டும் ஓய்வதற்கான அறிகுறி இல்லை.
சமூக வலைதளங்களில் இருவரும் ஒருவரின் பதிவுகளை மற்றொருவர் லைக் செய்வதும், மிருணாள் அடிக்கடி தமிழ் பாடல்களை பாடி வீடியோ வெளியிடுவதும் ரசிகர்களின் சந்தேகத்தை மேலும் தூண்டியுள்ளது. “இது காதல் இல்லாமல் வேறு என்ன?” என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பும் அளவுக்கு இந்த விவாதம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், பொங்கல் பண்டிகை காலத்தில் சமூக வலைதளங்களில் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. பிப்ரவரி 14, அதாவது காதலர் தினத்தன்று தனுஷும் மிருணாள் தாகூரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திருமணத்தில் இரு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்றும், இருவரும் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படையாக பேச விரும்பாதவர்கள் என்பதால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் பேசப்படுகிறது. குறிப்பாக Reddit உள்ளிட்ட தளங்களில் இந்த கல்யாணக் கிசுகிசு வேகமாக பரவி வருகிறது.
இந்த செய்தி உண்மையா இல்லையா என்பதே தெரியாத நிலையில், ரசிகர்களிடையே விவாதம் உச்சத்தைத் தொட்டுள்ளது. சிலர், விவாகரத்தான தனுஷை மிருணாள் திருமணம் செய்வது சரியா என்ற கேள்வியை எழுப்ப, மற்றவர்கள் தனுஷின் திறமை, தேசிய விருதுகள், புகழ் மற்றும் வருமானத்தை சுட்டிக்காட்டி அவரை ஆதரிக்கின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தனுஷ் தனது கேரியரிலும் கவனம் செலுத்தி வருகிறார். இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவாகும் தனது புதிய படமான D54-க்கு ‘கர’ என்ற தலைப்பை அறிவித்து, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
முன்னதாக, சூப்பர் ஸ்டார் Rajinikanth அவர்களின் மூத்த மகள் Aishwarya Rajinikanth ஐ காதலித்து திருமணம் செய்த தனுஷ், பின்னர் சட்டப்படி விவாகரத்து பெற்றார். அவர்களின் மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா தாயுடன் வசித்து வருகிறார்கள். இருந்தாலும், குழந்தைகள் விஷயத்தில் தனுஷும் ஐஸ்வர்யாவும் நல்ல புரிதலுடன் செயல்படுவது பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
இந்நிலையில், காதலர் தினத்தில் கல்யாணம் என்ற இந்த கிசுகிசு உண்மையா, அல்லது சமூக வலைதளங்களின் கற்பனையா என்பது விரைவில் தெரிய வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.



