சட்டமன்றத் தேர்தல் விஜய்–ஸ்டாலின் இடையேயான போர்: தவெக தலைவர் விஜய்

“ஸ்டாலின் டெல்லியில் சென்று போட்டியிடப் போகிறாரா? ஒவ்வொரு தேர்தலையும் எவ்வாறு கையாள வேண்டும் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.

பெப்ரவரி 23, 2026 - 16:20
சட்டமன்றத் தேர்தல் விஜய்–ஸ்டாலின் இடையேயான போர்: தவெக தலைவர் விஜய்

வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்க்கும், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும் இடையேயான நேரடி அரசியல் போராக மாறும் என்று விஜய் தெரிவித்தார்.

வேலூரில் இன்று திங்கட்கிழமை (23) நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் உரையாற்றிய அவர், மக்களை உண்மையாக நேசிக்கும் நல்ல தலைமை இல்லாத காரணத்தால், மு.க. ஸ்டாலினின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறினார். இதனை மாற்றும் நோக்கில் சரியான நேரத்தில் வெகுஜன இயக்கமாக தவெக உருவெடுத்துள்ளதாகவும், தவெக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்திற்கும் நேரடியாக சென்று மக்களை சந்திப்பேன் என்றும் உறுதியளித்தார்.

இந்த தேர்தலை திமுக, “தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான தேர்தல்” என கூறி வருவதாக குறிப்பிட்ட விஜய், “ஸ்டாலின் டெல்லியில் சென்று போட்டியிடப் போகிறாரா? ஒவ்வொரு தேர்தலையும் எவ்வாறு கையாள வேண்டும் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். தமிழ்நாட்டு மக்கள் தெளிவானவர்கள்” என்று விமர்சித்தார்.

மேலும், “இந்த தேர்தல் உண்மையில் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழல், லஞ்சத்துக்குமான போர். தமிழ்நாட்டுக்கும் திமுக ஆட்சிக்குமான போர். விஜய்க்கும் ஸ்டாலினுக்கும் இடையேயான போர். அனைவரும் ஒன்று சேர்ந்து என்னை எதிர்க்கின்றனர். நான் மக்களோடு மக்களாக நிற்பதால்தான் இத்தகைய எதிர்ப்புகள். திமுகவும் தவெகவும் இடையேதான் உண்மையான போட்டி நடைபெறுகிறது” என்றும் அவர் கூறினார்.

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!