பாக்யராஜ் உடலைச் சுற்றி சுற்றி வந்த வளர்ப்பு நாய்... கண்கலங்க வைத்த நெகிழ்ச்சி தருணம்

இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜின் இறுதி அஞ்சலியின்போது, அவரது வளர்ப்பு நாய் உடலைச் சுற்றி சுற்றி வந்து பாசத்தை வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான காட்சி அங்கிருந்த அனைவரையும் கண்கலங்கச் செய்தது.

பாக்யராஜ் உடலைச் சுற்றி சுற்றி வந்த வளர்ப்பு நாய்... கண்கலங்க வைத்த நெகிழ்ச்சி தருணம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

பிரபல இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் காலமானதைத் தொடர்ந்து, அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி அஞ்சலியில் நடந்த ஒரு சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மாரடைப்பால் உயிரிழந்த பாக்யராஜின் உடல், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகிலுள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள், ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்தது. ஏராளமானோர் நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்தினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த நிலையில், பாக்யராஜின் வளர்ப்பு நாய் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தனது எஜமானரின் உடலை விட்டு விலக மறுத்த அந்த நாய், சோகத்துடன் அவரது முகத்தையே பார்த்தபடி நீண்ட நேரம் நின்றதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டியை மீண்டும் மீண்டும் சுற்றி வந்த அந்த நாய், தனது பாசத்தையும் பிரிவின் வேதனையையும் வெளிப்படுத்தியது. அந்த காட்சி அங்கு இருந்தவர்களின் மனதை உருக்கி, பலரையும் கண்கலங்கச் செய்தது.

மனிதர்களுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் இடையிலான ஆழமான பாசத்தை வெளிப்படுத்திய இந்த தருணம், சமூக வலைதளங்களிலும் பலரால் பகிரப்பட்டு நெகிழ்ச்சியுடன் பேசப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT