பெற்ற குழந்தையை ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்: தாய் கைது

மேற்கு வங்கத்தில் ஹவுரா-பார்பில் ஜன் ஷதாப்தி அதிவேக ரெயிலில் பயணித்த தாய், தனது 6 மாதக் குழந்தையை ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசிக் கொலை செய்துள்ளார்.

பெற்ற குழந்தையை ஓடும் ரெயிலில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்: தாய் கைது
ADVERTISEMENT
ADVERTISEMENT

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது ஷஹாபுதீன். இவரது மனைவி முத்ராவதி கோப். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், ஷஹாபுதீன் மற்றும் முத்ராவதி தங்களது குழந்தைகளுடன் ஹவுரா-பார்பில் ஜன் ஷதாப்தி அதிவேக ரெயிலில் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது, தனது சொந்த ஊருக்குச் செல்லுமாறு ஷஹாபுதீன் மனைவியைக் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் ரெயிலுக்குள் இருவருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த முத்ராவதி, தான் பெற்ற குழந்தை என்றும் பார்க்காமல் தனது 6 மாத ஆண் குழந்தையை ஓடும் ரெயிலில் இருந்து வெளியே தூக்கி வீசினார். இதைக் கண்ட ஷஹாபுதீனும் மற்ற பயணிகளும் அதிர்ச்சியடைந்தனர். அதன்பின்னரும் நிற்காமல், தனது 3 வயதுடைய மற்றொரு குழந்தையையும் ஓடும் ரெயிலில் இருந்து வெளியே வீச முயன்றுள்ளார்.

அப்போது சுதாரித்துக் கொண்ட பயணிகள், முத்ராவதியிடமிருந்து அந்தக் குழந்தையை மீட்டனர். உடனடியாக இது குறித்துப் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், பெற்ற குழந்தையையே ரெயிலில் இருந்து தூக்கி வீசிக் கொலை செய்த அந்தத் தாயைக் கைது செய்தனர். தண்டவாளத்தில் இருந்து குழந்தையின் சடலத்தை மீட்ட போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT