ஈரான் பள்ளி தாக்குதல் ‘மனித உரிமை மீறல்’ – யுனிஸ்கோ கடும் கண்டனம்

ஈரான் நாட்டில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளி மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தியதாக கூறப்படும் தாக்குதலில் பலி எண்ணிக்கை 165 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் பள்ளி தாக்குதல் ‘மனித உரிமை மீறல்’ –  யுனிஸ்கோ கடும் கண்டனம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

ஈரான் நாட்டில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளி மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தியதாக கூறப்படும் தாக்குதலில் பலி எண்ணிக்கை 165 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் உலகளவில் கடும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. கல்வி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கும், குழந்தைகள் பாதுகாப்பு ஒப்பந்தங்களுக்கும் எதிரானது என்று பல அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனிஸ்கோ இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளது. பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் எப்போதும் பாதுகாப்பான இடங்களாக இருக்க வேண்டும் என்றும், கல்வி அமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மனித உரிமை மீறலாக கருதப்பட வேண்டும் என்றும் யுனிஸ்கோ தெரிவித்துள்ளது.

மேலும், பொதுமக்கள் மற்றும் குறிப்பாக குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்று சர்வதேச சமூகத்திடம் யுனிஸ்கோ வலியுறுத்தியுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT