சவுதி அரேபியா விமான நிலையத்தை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள்!

இதனால், சவுதி அரேபியாவுக்கும் ஈரானிய ஆதரவு பெற்ற இந்த ஆயுதக் குழுவுக்கும் இடையில் நான்கு வருடங்களாக நிலவி வந்த போர்நிறுத்த உடன்பாடு முறிவடைந்துள்ளது. 

சவுதி அரேபியா விமான நிலையத்தை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

சவுதி அரேபியாவின் அபா (Abha) சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து பெலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

யேமனின் சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது சவுதி அரேபியா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹூதி கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனால், சவுதி அரேபியாவுக்கும் ஈரானிய ஆதரவு பெற்ற இந்த ஆயுதக் குழுவுக்கும் இடையில் நான்கு வருடங்களாக நிலவி வந்த போர்நிறுத்த உடன்பாடு முறிவடைந்துள்ளது. 

அபா (Abha) என்பது யேமன் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள மலைப்பாங்கான தெற்கு பிராந்தியத்தின் தலைநகரமாகும், மேலும் பல சவுதி குடிமக்கள் அங்கு சுற்றுலா மேற்கொள்கின்றனர். 

2022 மார்ச் மாதத்தில் சவுதியின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல்களின் பின்னர் எட்டப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டுக்கு பிறகு சவுதி அரேபியாவுக்கு எதிராக நடத்தப்பட்டதாக ஹூதி அமைப்பினர் பொறுப்பேற்றுக் கொண்ட முதலாவது தாக்குதல் இதுவாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT