நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மேலும் இரு அதிகாரிகள் உயிரிழப்பு

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய சிறைச்சாலை அதிகாரிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மேலும் இரு அதிகாரிகள் உயிரிழப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரு சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். 

நேற்று (13) மற்றும் இன்று (14) அதிகாலை வேளையில் குறித்த இரு சிறைச்சாலை அதிகாரிகளும் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இவ்வாறு உயிரிழந்தவர்கள் 25 மற்றும் 39 வயதுடைய சிறைச்சாலை அதிகாரிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதன்படி, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த ஜூலை மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 21 சிறைக்கைதிகளும் உயிரிழந்தனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதற்கமைய, பதிவாகியுள்ள மொத்த மரணங்களின் எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT