நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்: உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

இதுவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் 29 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்: உயிரிழந்த 8 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
ADVERTISEMENT
ADVERTISEMENT

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த வாரம் ஏற்பட்ட வன்முறையில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 21 கைதிகள் உயிரிழந்தனர். இந்த மோதலில் உயிரிழந்த 8 சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் சிறைச்சாலைத் திணைக்களம் மரணத்துக்குப் பின்னரான பதவி உயர்வுகளை வழங்கியுள்ளது.

அதன்படி, இரண்டாம் தர ஜெயிலராக இருந்த எஸ்.எச்.எஸ். சந்திரவன்ச, முதலாம் தர ஜெயிலராக தரம் உயர்த்தப்பட்டுள்ளார். ஏனைய உயிரிழந்த சிறைச்சாலைக் காவலர்கள் அனைவரும் சிறைச்சாலை சார்ஜன்ட் தரத்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) பொறுப்பேற்றுள்ளது. 

கொழும்பு மற்றும் நீர்கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த அதிகாரிகள் மற்றும் கைதிகளிடம் அவர்கள் வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இதுவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் 29 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

விசாரணைகளின் போது, "கடுவெல்லேகம சுரேஷ்" என அடையாளம் காணப்பட்ட ஒரு கைதியுடன் தொடர்புடைய குழுவினரே தங்களைத் தாக்கியதாக சில கைதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்தக் கலவரத்தில் சுரேஷிற்கு முக்கிய பங்கு இருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. எனினும், சில சிறைச்சாலை அதிகாரிகள் இன்னும் வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லாததால், அந்த நடைமுறை முழுமையடையவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, நீர்கொழும்பு சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பெண் கைதிகளும் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், வன்முறையின் போது காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்த சிறைச்சாலை சார்ஜன்ட் காமகே உபாலியின் உடல் நேற்று வெள்ளிக்கிழமை (10 ) அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. உயிரிழந்த மற்றோர் அதிகாரியான சார்ஜன்ட் ருவன் திலகசிறியின் இறுதிச் சடங்குகளும் நேற்று நடைபெற்றது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT