நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்: எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கையெழுத்து!

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை சம்பவத்தில் பொறுப்பை நிறைவேற்றத் தவறியதாகக் கூறி, இலங்கை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எம்பிக்கள் இன்று நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையெழுத்திட்டனர்.

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்: எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கையெழுத்து!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (10) தீர்மானித்துள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் அண்மையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் காரணமாகப் பலத்த சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் பாதுகாப்பு தொடர்பில், நீதி அமைச்சர் என்ற வகையில் அவர் தனது கடமையையும், பொறுப்பையும் சரிவர நிறைவேற்றத் தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இக்குற்றச்சாட்டை முன்வைத்தே இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படுகின்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

அதற்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், இன்று (10) நாடாளுமன்றத்தில் வைத்து இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளனர். இந்த விவகாரம் இலங்கை அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT