இலங்கையில் பேருந்து கட்டணம் 12% உயர்வு: குறைந்தபட்ச கட்டணம் ரூ.34 ஆக அதிகரிப்பு

இலங்கையில் பேருந்து கட்டணங்கள் 12 சதவீதத்தால் அதிகரிக்கப்படுகின்றன. குறைந்தபட்ச கட்டணம் 30 ரூபாவில் இருந்து 34 ரூபாயாக உயர்ந்து, புதிய கட்டணம் ஜூலை 6 முதல் அமுலுக்கு வரும்.

இலங்கையில் பேருந்து கட்டணம் 12% உயர்வு: குறைந்தபட்ச கட்டணம் ரூ.34 ஆக அதிகரிப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையில் பேருந்து கட்டணங்கள் 12 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்த புதிய கட்டண திருத்தம் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதன்படி, இதுவரை 30 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 34 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சாதாரண சேவை பேருந்துகளுக்கான கட்டண அதிகரிப்பு, பயண தூரத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளது. 100 கிலோமீற்றருக்கும் குறைவான பயண தூரங்களுக்கு 12 சதவீத கட்டண உயர்வும், 100 கிலோமீற்றர் அல்லது அதற்கு மேற்பட்ட பயண தூரங்களுக்கு 20 சதவீத கட்டண உயர்வும் அமுல்படுத்தப்படவுள்ளது.

அதேவேளை, சொகுசு பேருந்துகளுக்கான கட்டணங்களிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 100 கிலோமீற்றருக்கும் குறைவான பயண தூரங்களுக்கு 12 சதவீதமும், 100 கிலோமீற்றருக்கும் அதிகமான பயண தூரங்களுக்கு 15 சதவீதமும் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

புதிய கட்டண திருத்தம் தொடர்பான மேலதிக விபரங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT