30 மி.மீ. மழையை மட்டுமே தாங்கும் கொழும்பின் வடிகால் அமைப்பு! சில மணி நேரத்தில் கொட்டிய 129 மி.மீ. மழை

கொழும்பின் வடிகால் அமைப்பு 30 மி.மீ. மழையை மாத்திரமே தாங்கும் நிலையில், 129 மி.மீ. மழை கொட்டியமையே திடீர் வெள்ளத்துக்குக் காரணம் என கொழும்பு மாநகர முதல்வர் விராய் கேலி பல்தசார் தெரிவித்துள்ளார்.

30 மி.மீ. மழையை மட்டுமே தாங்கும் கொழும்பின் வடிகால் அமைப்பு! சில மணி நேரத்தில் கொட்டிய 129 மி.மீ. மழை
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பு நகரின் வடிகால் அமைப்பு சுமார் 30 மில்லிமீற்றர் மழையை மாத்திரமே தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை (06) மாலை வேளையில் சில மணித்தியாலங்களுக்குள் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவானமையே நகரில் பரவலான வெள்ளப்பெருக்குக்கும் போக்குவரத்து நெரிசல்களுக்கும் காரணம் என கொழும்பு மாநகர மேயர் விராய் கேலி பல்தசார் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு நகரில் பெய்த திடீர் கனமழையினால் பல்வேறு தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியதுடன் பிரதான வீதிகளினூடான போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்த திடீர் வெள்ள அனர்த்த நிலைமைக்கு உடனடித் தீர்வுகளைக் காணும் நோக்கில், கொழும்பு மாநகர மேயர் தலைமையில் முக்கிய அரச நிறுவனங்களின் அதிகாரிகளும் பிரதிநிதிகளும் பங்கேற்ற விசேட கலந்துரையாடலொன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே, மாநகர மேயர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நகரின் வடிகால் அமைப்புகளை உடனடியாகச் சீரமைத்து மேம்படுத்துதல், கொழும்பு நகரை அண்டிய கால்வாய் வலையமைப்புகளைத் துப்பரவு செய்தல் மற்றும் வீதி உள்கட்டமைப்புகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டு, உடனடி நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT