நீர்கொழும்பு சிறை வன்முறை: CCD, CID இணைந்து விசாரணை ஆரம்பம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு நாட்களாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். CCD மற்றும் CID இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

நீர்கொழும்பு சிறை வன்முறை: CCD, CID இணைந்து விசாரணை ஆரம்பம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரு நாட்களாக இடம்பெற்ற அமைதியின்மை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (CID) இணைந்து முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. இந்த நடவடிக்கைக்கு நீதிமன்ற உத்தரவும் பெறப்பட்டுள்ளது.

நேற்று (06) மற்றும் நேற்று முன்தினம் (05) ஆகிய தேதிகளில் இடம்பெற்ற மோதல்களில் மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். இவர்களில் 19 பேர் கைதிகள் எனவும், 7 பேர் சிறைச்சாலை அதிகாரிகள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், 23 சிறை அதிகாரிகளும், 54 கைதிகளும் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களில் 18 பேர் தீவிர சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வன்முறைச் சம்பவத்தின் போது, சிறைச்சாலைக்குள் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் உடல் பரிசோதனை இயந்திரங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் கைதிகளால் முற்றாக சேதப்படுத்தப்பட்டுள்ளன.

சிறைச்சாலையின் இயல்பான செயற்பாடுகளை முடக்குவதே இந்த வன்முறையின் முக்கிய நோக்கமாக இருந்ததாக முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வன்முறைக்கு நேரடியாக காரணமான சில கைதிகள் ஏற்கனவே அகுணுகொலபெலஸ்ஸ மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புக் கருதி மொத்தம் 700 கைதிகள் அகுணுகொலபெலஸ்ஸ, போகம்பர, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளுக்கு அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவுகளின் விசாரணைகள் தொடர்வதுடன், சம்பவம் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் தலைமையிலான சிறப்புக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் உடற்கூற்றுப் பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளதோடு, உறவினர்கள் அவர்களை அடையாளம் காணும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT