நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவம்: உயிரிழப்பு 26 ஆக உயர்வு... அமைச்சரவை கூட்டத்தில் விசேட அவதானம்!

இலங்கையின் நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைச் சம்பவம்: உயிரிழப்பு 26 ஆக உயர்வு... அமைச்சரவை கூட்டத்தில் விசேட அவதானம்!
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கையின் நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் இரண்டு நாட்களாக நீடித்து வரும் வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை காவல்துறையின் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த மோதலில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அவர்கள் நீர்க்கொழும்பு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

உயிரிழந்தவர்களில் சிறைச்சாலை அதிகாரிகளும் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு புறநகர் பகுதியில் அமைந்துள்ள நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று கைதிகளின் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், பின்னர் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையிலான வன்முறையாக மாறியுள்ளது.

முதல்நாளில் இரண்டு பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்திருந்தனர். பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், இன்று மீண்டும் வன்முறை வெடித்ததால் உயிரிழப்பும் காயமடைந்தோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பல காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீஸார் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டனர். பதற்றமான சூழ்நிலையை கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடும் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறைச்சாலைக்குள் இருந்து காயமடைந்த கைதிகள் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்புப் படையினரால் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதற்கிடையில், பெண் கைதிகள் சிறைச்சாலையின் கூரையில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கைதிகளின் உறவினர்களும் சிறை வளாகம் முன்பு பதற்றமான சூழலை உருவாக்கினர்.

இந்த சிறைச்சாலையில் சந்தேகநபர்கள் மற்றும் தண்டனை கைதிகள் இருவரும் இருப்பதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் ஓய்வுபெற்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான மிலிந்த குணதிலக்க மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மோஹன் வீரகோன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறைக்கான காரணங்கள், பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளுடன் விரிவான அறிக்கையை இந்தக் குழு அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT