ஜனாதிபதியை சந்தித்த ஐசிசி தலைவர் ஜெய் ஷா; இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஜனாதிபதியை சந்தித்த ஐசிசி தலைவர் ஜெய் ஷா; இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை
ADVERTISEMENT
ADVERTISEMENT

இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் தொடர்பாக அண்மையில் உருவாகியுள்ள சர்ச்சைகள் மற்றும் இடைக்கால குழு விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள இடைக்கால குழு தொடர்பான விவகாரம் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறிப்பாக, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகக் கொள்கைகள் மற்றும் சுயாதீனத் தன்மை தொடர்பான விதிமுறைகளுடன் இந்த நியமனம் ஒத்துப்போகிறதா என்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சரால் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திற்காக இடைக்கால குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அதன் பின்னர், அந்த நியமனம் தொடர்பாக உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு விவாதங்கள் எழுந்தன.

இதற்கிடையில், சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த கடிதத்தின் முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாதபோதிலும், கிரிக்கெட் நிர்வாகத்தை ஜனநாயக ரீதியில் முன்னெடுக்க தேர்தலை விரைவாக நடத்த வேண்டிய அவசியம் குறித்து அதில் வலியுறுத்தப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கிரிக்கெட்டில் நீண்டகால சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் நோக்கில் புதிய அரசியலமைப்பு அல்லது யாப்பு உருவாக்கும் பணிகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாற்றங்களை நிறைவேற்றுவதற்காக கூடுதல் கால அவகாசம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இடைக்கால குழுவினரிடையே காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்நிலையில், ஜெய் ஷா மற்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இடையேயான இந்த சந்திப்பு, இலங்கை கிரிக்கெட்டின் எதிர்கால நிர்வாக அமைப்பு மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடனான உறவுகளில் முக்கிய திருப்புமுனையாக அமையக்கூடும் என விளையாட்டு வட்டாரங்கள் கருதுகின்றன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT