பெங்கொக்கிலிருந்து வந்த 'பரிசில்' 106 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது!

கடந்த ஜூலை 24ஆம் திகதியன்று, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான UL405 விமானத்தின் மூலம் இந்தப் பொதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. இது ஒரு 'பரிசு' என அறிவிக்கப்பட்டிருந்தது.

பெங்கொக்கிலிருந்து வந்த 'பரிசில்' 106 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் சிக்கியது!
ADVERTISEMENT
ADVERTISEMENT

தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து இலங்கைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட பொதியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10.6 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருளை இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த ஜூலை 24ஆம் திகதியன்று, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான UL405 விமானத்தின் மூலம் இந்தப் பொதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. இது ஒரு 'பரிசு' என அறிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

ஜூலை 31ஆம் திகதி, ட்ரிகோ UPB களஞ்சியசாலையில் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவரின் முன்னிலையில் அதிகாரிகள் இந்தப் பொதியை சோதனையிட்டனர். 

இதன்போது, உலோகக் கொள்கலன்களுக்குள் பொலித்தீன் உறைகளில் மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இறுதிச் சோதனையின் போது, கஞ்சா, ஹாஷிஷ் மற்றும் ஹாஷிஷ் எண்ணெய் உள்ளிட்ட 10.608 கிலோகிராம் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 106.08 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT