விமான நிலையத்துக்கு மலர்ச் செடிகளுடன் வந்த இலங்கைப் பெண் கைது! ஏன் தெரியுமா?

1993ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க தாவர பாதுகாப்புச் சட்டத்தின் (Plant Protection Act) படி, இலங்கைக்கு தாவரங்கள் அல்லது அவற்றின் பாகங்களை இறக்குமதி செய்வதற்கு விவசாயத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் அவசியம் ஆகும். 
விமான நிலையத்துக்கு மலர்ச் செடிகளுடன் வந்த இலங்கைப் பெண் கைது! ஏன் தெரியுமா?
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைத்து சட்டவிரோதமான முறையில் மலர்ச் செடிகளைக் கொண்டு வர முயன்ற இலங்கைப் பெண் ஒருவர், சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாய்லாந்து நாட்டின் பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான UL 403 என்ற விமானம் மூலம் வருகை தந்த இப்பெண், விமான நிலையத்தின் 'கிறீன் சேனல்' (Green Channel) பகுதியில் வைத்து அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

விமான நிலைய சுங்க அதிகாரிகள் மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய மரபுரிமை பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

1993ஆம் ஆண்டின் 35ஆம் இலக்க தாவர பாதுகாப்புச் சட்டத்தின் (Plant Protection Act) படி, இலங்கைக்கு தாவரங்கள் அல்லது அவற்றின் பாகங்களை இறக்குமதி செய்வதற்கு விவசாயத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் அவசியம் ஆகும். 

அத்துடன், ஏற்றுமதி செய்யும் நாட்டில் இருந்து குறித்த தாவரங்கள் “பூச்சிகள் அற்றவை” என்பதையும் தனிமைப்படுத்தப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ளன என்பதையும் உறுதிப்படுத்தும் சான்றிதழும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இந்த விதிமுறைகளை மீறி தாவரங்களை இறக்குமதி செய்வது சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய சட்டவிரோத செயலாகும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விசாரணைகளைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட மலர்ச் செடிகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டதுடன், குறித்த பெண் பயணிக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. 

பறிமுதல் செய்யப்பட்ட செடிகள் அனைத்தும் அழிக்கப்படுவதற்காக விமான நிலைய தாவர தனிமைப்படுத்தல் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -