மலேசியாவிலிருந்து வந்த மர்மப் பொதிகளில் ரூ.181 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

விசேட சோதனையின்போது சந்தேகத்திற்கிடமான இந்தப் பொதிகள் அடையாளம் காணப்பட்டன. இதனையடுத்து, அவற்றைப் பெற்றுக்கொள்ள வருபவர்களைக் கைது செய்யும் நோக்கில் பொதிகள் தடுத்து வைக்கப்பட்டன.

மலேசியாவிலிருந்து வந்த மர்மப் பொதிகளில் ரூ.181 மில்லியன் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!
ADVERTISEMENT
ADVERTISEMENT

மலேசியாவிலிருந்து அனுப்பப்பட்ட மூன்று மர்மப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 181.93 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருளை இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

பெலியகொடையிலுள்ள சுங்கக் களஞ்சியசாலையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே, இந்தப் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

கைப்பற்றப்பட்ட ஹஷிஷ் போதைப்பொருளின் மொத்த எடை 18.193 கிலோகிராம் என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மலேசியாவிலிருந்து அனுப்பப்பட்ட மூன்று பொதிகளுக்குள் இந்தப் போதைப்பொருள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். 

சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனையின்போது சந்தேகத்திற்கிடமான இந்தப் பொதிகள் அடையாளம் காணப்பட்டன. இதனையடுத்து, அவற்றைப் பெற்றுக்கொள்ள வருபவர்களைக் கைது செய்யும் நோக்கில் பொதிகள் தடுத்து வைக்கப்பட்டன.

எனினும், நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் பொதிகளைப் பெற்றுக்கொள்ள எவரும் வருகை தராததால், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு (PNB) அதிகாரிகள் முன்னிலையில் பொதிகள் திறந்து சோதனையிடப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, சுங்கத் திணைக்களத்தின் ஆரம்பகட்ட விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

Add as Preferred Source News on WhatsApp YouTube
ADVERTISEMENT
ADVERTISEMENT