போலி முத்திரையிட்டு விற்பனை செய்ய முயற்சி; காலாவதியான விவசாய இரசாயனங்கள் பறிமுதல்!

இந்தப் பொருட்களைக் கடத்தப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் 4 லொறிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

போலி முத்திரையிட்டு விற்பனை செய்ய முயற்சி; காலாவதியான விவசாய இரசாயனங்கள் பறிமுதல்!
AI generated image
ADVERTISEMENT
ADVERTISEMENT

கடுவெல, பொமிரியா பகுதியில் கடந்த 21ஆம் திகதியன்று நடத்தப்பட்ட விசேட சோதனையின் போது, காலாவதியான கிருமிநாசினிகள், களைக்கொல்லிகள், பூஞ்சண நாசினிகள் மற்றும் உரங்கள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இந்தத் தயாரிப்புகள் போலி முத்திரைகளைப் பயன்படுத்தி உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யத் தயார் செய்யப்பட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

இந்தப் பறிமுதலில் சுமார் 376 கிலோ 350 கிராம் திடப்பொருட்களும், 1,170 லிட்டர் 340 மில்லி திரவ நிலை விவசாய இரசாயனங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

இச்சம்பவம் தொடர்பாக அம்பாறை, நியூ டவுன் பகுதியைச் சேர்ந்த 34 வயது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்தப் பொருட்களைக் கடத்தப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் 4 லொறிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

கைப்பற்றப்பட்ட பொருட்கள் மற்றும் வாகனங்களுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை சீல் வைத்துள்ளதுடன், இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT