போலி முத்திரையுடன் தயாரிக்கப்பட்ட 8,500 குடிநீர் போத்தல்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு

அவிசாவளையில் போலி SLS முத்திரையுடன் தயாரிக்கப்பட்ட 8,500 இற்கும் மேற்பட்ட குடிநீர் போத்தல்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், நிறுவனத்துக்கு அபராதமும் விதித்துள்ளது.
போலி முத்திரையுடன் தயாரிக்கப்பட்ட 8,500 குடிநீர் போத்தல்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

போலியான இலங்கைத் தரக்கட்டளை (SLS) முத்திரை மற்றும் அங்கீகரிக்கப்படாத வர்த்தக நாமத்தைப் பயன்படுத்தி போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரைத் தயாரித்து விநியோகித்த அவிசாவளை, சீதாவக்கைப் பகுதியிலுள்ள நிறுவனம் ஒன்றுக்கும் அதன் பணிப்பாளருக்கும் எதிராகப் பாவனையாளர் விவகார அதிகார சபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

சுகாதார அமைச்சால் அங்கீகரிக்கப்பட்ட 'லங்கா பிரீமியம்' (Lanka Premium) என்ற பெயருக்குப் பதிலாக, 'அக்வாச்சில்' (Aquachill) என்ற பெயரில் லேபிளிடப்பட்டுத் தயாரிக்கப்பட்ட 8,500 இற்கும் மேற்பட்ட குடிநீர் போத்தல்களைப் பாவனையாளர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் கடந்த ஓகஸ்ட் 21ஆம் திகதி மேற்கொண்ட திடீர் சோதனையின்போது கைப்பற்றினர்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கையிருப்பில் 19 லீற்றர், 5 லீற்றர், 1,500 மில்லி லீற்றர், 1,000 மில்லி லீற்றர் மற்றும் 500 மில்லி லீற்றர் கொள்ளளவு கொண்ட பல்வேறு அளவிலான போத்தல்கள் அடங்கியிருந்தன.

இச்சம்பவம் தொடர்பான வழக்கு, அவிசாவளை நீதவான் நீதிமன்றில் செப்டம்பர் 04ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதிகள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து குறித்த நிறுவனத்திற்கும் அதன் பணிப்பாளருக்கும் 40,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம், வழக்கின் சான்றுப் பொருட்களாக முன்னிலைப்படுத்தப்பட்ட அனைத்து குடிநீர் போத்தல்களையும் அழிக்குமாறு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, கைப்பற்றப்பட்ட போத்தல்கள் அனைத்தும் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே அழிக்கப்பட்டன.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரைக் கொள்வனவு செய்யும்போது சரியான வர்த்தக நாமம், உற்பத்தித் திகதி, காலாவதியாகும் திகதி மற்றும் உத்தியோகபூர்வ SLS தரச் சான்றிதழ் முத்திரை ஆகியவற்றைச் சரிபார்த்து வாங்குமாறு பாவனையாளர்களைப் பாவனையாளர் விவகார அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது. 

மேலும், இவ்வாறான மோசடியான அல்லது சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருப்பின், 1977 என்ற துரித இலக்கத்தின் ஊடாகத் தமக்கு அறிவிக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -