அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு AI பயன்பாடு குறித்த செயலமர்வு

அரசாங்க தகவல் திணைக்கள ஏற்பாட்டில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கான செய்தி அறைகளில் AI பயன்பாடு குறித்த விசேட செயலமர்வு கொழும்பில் நடைபெற்றது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு AI பயன்பாடு குறித்த செயலமர்வு
ADVERTISEMENT
ADVERTISEMENT

தமிழ் மொழியில் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கான விசேட செயலமர்வொன்றை அரசாங்க தகவல் திணைக்களம் இன்று ஏற்பாடு செய்திருந்தது. திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் எச்.எஸ்.கே.ஜே. பண்டாரவின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டது.

திணைக்களத்தின் மேலதிக தகவல் பணிப்பாளர் நாயகம் வை. பரன்தாமன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைரூஸ் வளவாளராகக் கலந்துகொண்டார். அவர் ‘செய்தி அறைகளில் AI பயன்பாடு’ என்ற தலைப்பில் ஊடகவியலாளர்களுக்கு விரிவுரையாற்றினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், இந்நிகழ்வில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எல்.பி. திலகரத்ன உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT