இறந்துவிட்டதாக பொலிஸார் அறிவித்த வாரியப்பொல சிறை கைதி, இறுதிச்சடங்கு வீட்டுக்கே உயிருடன் வந்த அதிர்ச்சி சம்பவம்!

கிராமம் முழுவதும் துயரப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், இறுதிச்சடங்கு வீட்டுக்கான பந்தல் அமைத்தல் மற்றும் தகனக் கிரியைகளுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.
இறந்துவிட்டதாக பொலிஸார் அறிவித்த வாரியப்பொல சிறை கைதி, இறுதிச்சடங்கு வீட்டுக்கே உயிருடன் வந்த அதிர்ச்சி சம்பவம்!
- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

இறந்துவிட்டதாக பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், உயிருடன் தனது இறுதிச்சடங்கு வீட்டுக்கே வந்து சேர்ந்த விசித்திர சம்பவம், கல்கமுவ - கொஹொபன்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது.

கல்கமுவ, கொஹொபன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன என்பவரே இவ்வாறு உயிருடன் வீடு திரும்பியுள்ளார்.

- ADVERTISEMENT -
- ADVERTISEMENT -

வாரியப்பொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கீர்த்திசேன, சிறைச்சாலைக்குள் உயிரிழந்துவிட்டதாக நான்னேரிய பொலிஸாரால் அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்களும் கிராம மக்களும் ஒன்றிணைந்து அவரது இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளத் தொடங்கினர்.

கிராமம் முழுவதும் துயரப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், இறுதிச்சடங்கு வீட்டுக்கான பந்தல் அமைத்தல் மற்றும் தகனக் கிரியைகளுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில், அனைவரையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தும் வகையில், கீர்த்திசேன திடீரென உயிருடன் தனது வீட்டிற்கு வந்து சேர்ந்துள்ளார்.

தனக்காக இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வீட்டுக்கே அவர் உயிருடன் வந்து சேர்ந்த சம்பவத்தால், கொஹொபன்குளம் கிராமமே பரபரப்பில் ஆழ்ந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் கீர்த்திசேன சிறைச்சாலையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதன் பின்னணி குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Source: adaderana

கூகுளில் நியூஸ்21ஐ பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

சமூக வலைத்தளங்களில் பின்தொடர