கொழும்பில் 14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்து 12 வயது சிறுவன் உயிரிழப்பு

சிறுவன் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்துக்கு அருகில் மேலும் சில சிறுவர்களுடன் நின்று சுற்றுப்புறத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவருகிறது. 

கொழும்பில் 14 மாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்து 12 வயது சிறுவன் உயிரிழப்பு
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பு 09 பகுதியில் அமைந்துள்ள 14 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பொன்றிலிருந்து தவறி விழுந்து 12 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். 

இந்தச் சம்பவம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) மாலை இடம்பெற்றுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

குறித்த சிறுவன் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்துக்கு அருகில் மேலும் சில சிறுவர்களுடன் நின்று சுற்றுப்புறத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவருகிறது. 

இதன்போது, அந்த மாடியில் திறந்த நிலையில் காணப்பட்ட ஒரு பகுதியினூடாக அச்சிறுவன் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவன், கொழும்பு 09 பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, அவர்கள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT