ரஷ்யாவிலிருந்து அழைத்து வரப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘ரொட்டும்ப அமில’ சி.ஐ.டி.யிடம் ஒப்படைப்பு
ரஷ்யாவிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரருமான ‘ரொட்டும்ப அமில’ என்பவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அழைத்து வரப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் இன்று (20) ரஷ்யாவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அங்கு வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் ‘கிளப் வசந்த’ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்பதுடன், மேலும் பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதும் இதுவரையான விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.