மெகசின் சிறைச்சாலை கலவரத்தில் கைதி ஒருவர் உயிரிழப்பு; 11 பேர் காயம்

துப்பாக்கிச் சூடு நடத்தப்படாத நிலையில், கைதியின் மரணத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய மரணப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

மெகசின் சிறைச்சாலை கலவரத்தில் கைதி ஒருவர் உயிரிழப்பு; 11 பேர் காயம்
ADVERTISEMENT
ADVERTISEMENT

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் நேற்று வியாழக்கிழமை (06) இரவு ஏற்பட்ட கலவரத்தில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினரால் நேரடித் துப்பாக்கிச் சூடுகள் எதுவும் நடத்தப்படவில்லை என்று அமைச்சர் உறுதிப்படுத்தினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

துப்பாக்கிச் சூடு நடத்தப்படாத நிலையில், கைதியின் மரணத்துக்கான சரியான காரணத்தைக் கண்டறிய மரணப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

சிறைச்சாலையில் போதைப்பொருள் அடங்கிய பொதி ஒன்று கண்டறியப்பட்டதும், அதனைத் தொடர்ந்து ஒரு கைதி கைது செய்யப்பட்டதே இந்தக் கலவரத்துக்குகு உடனடித் தூண்டுதலாக அமைந்துள்ளது. அரசாங்கத்தின் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிரான ஒரு எதிர்வினையாகவே இந்த மோதல் பார்க்கப்படுகிறது.

இந்த மோதலில் சுமார் 40 கைதிகள் ஈடுபட்டிருந்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் (STF) பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

தற்போது சிறைச்சாலையின் நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், பாதுகாப்புக் காரணங்களுக்காக சிறைச்சாலைக்கு பார்வையாளர்கள் வருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT