பஸ் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களில் 10% பேர் போதைப்பொருள் பயன்பாடு - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

மேல், தெற்கு, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் போதைப்பொருள் பரிசோதனைகளின் முடிவுகளில் இந்த உண்மை வெளிவந்துள்ளது.

பஸ் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களில் 10% பேர் போதைப்பொருள் பயன்பாடு - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
ADVERTISEMENT
ADVERTISEMENT

திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்ட பஸ் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களில் கிட்டத்தட்ட 10 சதவீதம் பேர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனர் என தெரியவந்துள்ளது. 

பஸ்  ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் (National Transport Medical Institute) தலைவர் பேராசிரியர் கிளிஃபோர்ட் பெரேரா உறுதிப்படுத்தியுள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT

போதைப்பொருள் தாக்கத்தில் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களைச் சோதிக்கும் செயல்முறை தொடர்கிறது என்றும் பேராசிரியர் தெரிவித்தார். 

மேல், தெற்கு, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் போதைப்பொருள் பரிசோதனைகளின் முடிவுகளில் இந்த உண்மை வெளிவந்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம், இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதில், மேல் மாகாணத்தில் மட்டும் 5,242 பஸ்  ஓட்டுநர்கள்மற்றும் நடத்துநர்கள் பரிசோதிக்கப்பட்டதில், 239 பேர் போதைப்பொருள் பயன்பாடு பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT

மேலும், 2026 ஜனவரி முதல் ஜூன் 12 வரை நாடு முழுவதும் 4,322 பணியாளர்கள் பரிசோதிக்கப்பட்டதில், 226 பேர் போதைப்பொருள் உபயோகத்தில் ஈடுபட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 

கொழும்பு - பஸ்டியன் மாவத்தையில் நடத்தப்பட்ட திடீர் ஆய்வில் 56 சாரதிகளில் 10 பேர் (சுமார் 18%) போதைப்பொருளின் தாக்கத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் செல்வாக்கின் கீழ் வாகனங்களைச் செலுத்தும் ஓட்டுநர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நோக்கில், இந்தப் பரிசோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பேராசிரியர் கிளிஃபோர்ட் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT